S.Renuka / 2026 ஜனவரி 06 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த 27 வயதான முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனை எஸ்.தனலட்சுமி மீண்டும் ஊக்கமருந்து பாவித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில், அவர் 8 ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் ஏற்கெனவே ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 3 ஆண்டு தடையை அனுபவித்தார்.
கடந்த ஆண்டு மறுபிரவேசம் செய்த அவர் ஒகஸ்டு மாதம் சென்னையில் நடந்த 64ஆவது தேசிய தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.36 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று கவனத்தை ஈர்த்தார்.
அதற்கு முன்பாக அவரிடம் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து சோதனை நடத்திய போது, 'டிரோஸ்டானோலான்' என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து தேசிய ஊக்கமருந்துதடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரித்தது. 2ஆவது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் அவருக்கு 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை காலம் கடந்த ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதியில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளது.
13 minute ago
52 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
52 minute ago
3 hours ago