2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தருஷிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு

Editorial   / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் நடந்து வரும் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 வருடங்களின் பின்னர் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் எமது நாட்டிற்காக தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்த 18 வயதான தருஷி கருணாரத்னவுக்கு ஒரு கோடி ரூபாய் பணப்பரிசு வழங்க இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது என அதன் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

 21 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை கொண்டு வந்த தருஷியை பாராட்ட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழுவிடம் யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், அதன்படி இந்த பணப்பரிசில் வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .