Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2024 பெப்ரவரி 22 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றபிறகும் ரசிகர்களின் அன்பும், பாசமும் மாறாமல் அப்படியே உள்ளது. அவர் எங்கு பயணம் மேற்கொண்டாலும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி முழக்கமிடுவதுடன் அவருடன் புகைப்படம் எடுத்தும், கிரிக்கெட் விளையாடியும் மகிழ்கின்றனர்
இந்நிலையில், சச்சின் தனது மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோருடன் கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்ற அவர், உள்ளூர் ரசிகர்கள், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்கிறார்.
அவ்வகையில், குல்மார்க் பகுதிக்கு சென்றபோது உள்ளூர் இளைஞர்களுடன் சாலையில் கிரிக்கெட் விளையாடினார். சச்சினுக்கு ஒரு பந்துவீச்சாளர் பந்து வீசினார். முதல் 5 பந்துகளையும் சச்சின் சரியாக அடித்தார். பின்னர் மட்டையை தலைகீழாக பிடித்த சச்சின், கடைசி பந்தில் என்னை அவுட் ஆக்குங்கள் பார்க்கலாம், என சவால் விட்டார். ஆனால் இந்த முறையும் அவரை பந்துவீச்சாளரால் அவுட் ஆக்க முடியவில்லை. கடைசி பந்தை மட்டையின் கைப்பிடியால் துல்லியமாக தடுத்தார் சச்சின். பின்னர் உள்ளூர் ரசிகர்கள் அனைவருடனும் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
இந்த மகிழ்ச்சியான தருணம் தொடர்பான வீடியோவை சச்சின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 'கிரிக்கெட் மற்றும் காஷ்மீர்: சொர்க்கத்தில் ஒரு போட்டி!' என அந்த வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Cricket & Kashmir: A MATCH in HEAVEN! pic.twitter.com/rAG9z5tkJV
— Sachin Tendulkar (@sachin_rt) February 22, 2024
46 minute ago
51 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
57 minute ago