2025 ஜூலை 05, சனிக்கிழமை

தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்த மிஸ்பா

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு உத்தியோகபூர்வமாக விண்ணபித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்கும் பாகிஸ்தானின் முன்னாள் தலைவர் மிஸ்பா-உல்-ஹக்கின் விருப்பம் உத்தியோகபூர்வமாகியுள்ளது.

பாகிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தரின் பதவிக்காலத்தை இம்மாத ஆரம்பத்தில் முடிவுக்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து தமது பயிற்சியாளர் குழாமை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மீளக்கட்டமைக்க வேண்டியுள்ளது.

உயர்தர கிரிக்கெட் வீரர்களுடன் குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவத்தைக் கொண்ட ஆகக்குறைந்தது இரண்டாம் தர பயிற்சியாளரொருவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தேடுகின்ற நிலையில், பாகிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளர்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று  முடிவடைந்திருந்தது.

மூன்றாண்டு பயிற்சி அனுபவத்தை மிஸ்பா-உல்-ஹக் கொண்டிருக்காதபோதும், பாகிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராவதற்கான விருப்பத்தை அவர் மட்டுமே பொதுவெளியில் வெளிப்படுத்தியிருந்த நிலையில், பாகிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மிஸ்பா-உல்-ஹக்கே பெரும்பாலும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தரின் பதவிக் காலத்தை முடிவுக்கு கொண்டு வருவதில், கிரிக்கெட் செயற்குழுவிலிருக்கும்போது மிஸ்பா-உல்-ஹக் பெரும்பணியாற்றியிருந்தார் என்பது குறிபிட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .