Shanmugan Murugavel / 2025 ஜூலை 20 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான நான்காவது டெஸ்டில் இந்தியாவின் றிஷப் பண்ட் விளையாடினால் துடுப்பாட்டவீரராக மாத்திரமே களமிறங்குவாரெனத் தெரிகிறது.
விரலில் அவருக்கு ஏற்பட்ட உபாதை குணமடைந்தாலும் அதில் தாக்கம் ஏற்பட்டால் வலியை உணருகின்ற நிலையில் துடுப்பாட்டவீரராக மாத்திரமே பண்ட் விளையாடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது.
அந்தவகையில் துருவ் ஜுரேல் விக்கெட் காப்பாளராக களமிறங்கினால் நிதிஷ் குமார் ரெட்டியை அவர் அணியில் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அர்ஷ்டீப் சிங்கும் காயமடைந்துள்ள நிலையில் இப்போட்டியில் ஜஸ்பிரிட் பும்ரா களமிறங்குவாரெனத் தெரிகிறது. வொஷிங்டன் சுந்தரை குல்தீப் யாதவ் பிரதியிடக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
இதேவேளை ஒவ்வொரு இனிங்ஸ்களிலும் ஆரம்பத்தைப் பெற்றபோதும் அதைப் குறிப்பிடத்தக்க ஓட்ட எண்ணிக்கையாக கருண் நாயர் மாற்றியிருக்காதபோதும் மூன்றாமிலக்கத்தில் புதிய வீரரைக் களமிறக்குவது சிக்கலானதென்ற நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago