2025 மே 21, புதன்கிழமை

தென்னாபிரிக்காவுக்கு 301 இலக்கை நிர்ணயித்தது இலங்கை

Editorial   / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கும், இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெறுகிறது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்து ஆட தெரிவு செய்தது.

இதன்படி,  துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்பில் அவிஸ்க பெர்ணான்டோ 118 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

அவிஸ்க பெர்ணான்டோ தனது மூன்றாவது ஒரு நாள் போட்டி சதத்தை இன்று (02) தனதாக்கிக் கொண்டுள்ளார்.

தனஞ்ஜய டி சில்வா 44 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

ஷரித்த அசலங்க 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .