2025 மே 17, சனிக்கிழமை

தென்னாபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா

Freelancer   / 2023 நவம்பர் 15 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், கொல்கத்தாவில் நாளை (16) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை தென்னாபிரிக்கா எதிர்கொள்ளவுள்ளது.

இந்த உலகக் கிண்ணத்தைப் பொறுத்த வரையில் இந்தியாவுக்கு அடுத்ததாக சவாலளிக்கும் அணியாக தென்னாபிரிக்காவே காட்சியளிக்கின்றபோதும், உலகக் கிண்ணம் என்று வருகின்ற நிலையில் அவுஸ்திரேலியா மூர்க்கமாக மாறுமென்ற நிலையில் இப்போட்டியில் எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காதென்றே கருதப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் விலகல் போட்டிகளில் தென்னாபிரிக்காவை துரதிர்ஷ்டம் துரத்தினாலும் குயின்டன் டி கொக், றஸி வான் டர் டுஸன், ஏய்டன் மார்க்ரம் ஹென்றிச் கிளாசென் என துடுப்பாட்டத்திலும், சகலதுறையில் மார்கோ ஜன்சனும், பந்துவீச்சில் ககிஸோ றபாடா இருப்பதோடு, தெம்பா பவுமாவின் அபாரமான தலைமைத்துவத்தின் கீழ் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை தென்னாபிரிக்கா கொண்டிருக்கிறது.

மறுபக்கமாக எந்தவொரு நிலையிலிருந்தும் அவுஸ்திரேலியா மீண்டு வந்து வெல்லுமென கிளென் மக்ஸ்வெல்லின் ஆப்கானிஸ்தானுக்கெதிரான இனிங்ஸ் சொல்லப்பட்டாலும் டேவிட் வோர்னர், ட்ரெவிஸ் ஹெட், மிற்செல் மார்ஷ் ஆகியோரில் ஒருவரின் பெரிய இனிங்ஸிலேயே அவுஸ்திரேலியாவின் வெற்றிவாய்ப்பு தங்கியிருக்கிறது.

எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணி: 1. குயின்டன் டி கொக் (விக்கெட் காப்பாளர்), 2. தெம்பா பவுமா (அணித்தலைவர்), 3. றஸி வான் டர் டுஸன், 4. ஏய்டன் மார்க்ரம், 5. ஹென்றிச் கிளாசென், 6. டேவிட் மில்லர், 7. மார்கோ ஜன்சன், 8. ககிஸோ றபாடா, 9. கேஷவ் மஹராஜ், 10. லுங்கி என்கிடி, 11. தப்ரையாஸ் ஷம்சி.

எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலிய அணி: 1. டேவிட் வோர்னர், 2. ட்ரெவிஸ் ஹெட், 3. மிற்செல் மார்ஷ், 4. ஸ்டீவன் ஸ்மித், 5. மர்னுஸ் லபுஷைன், 6. ஜொஷ் இங்லிஸ் (விக்கெட் காப்பாளர்), 7. கிளென் மக்ஸ்வெல், 8. பற் கமின்ஸ் (அணித்தலைவர்), 9. மிற்செல் ஸ்டார்க், 10. ஜொஷ் ஹேசில்வூட், 11. அடம் ஸாம்பா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .