Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் (ODI) தொடரானது, செஞ்சூரியனில் இலங்கை நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகின்றது.
தெம்பா பவுமா தலைமையில் முதன்முறையாக இத்தொடரில் தென்னாபிரிக்கா களமிறங்குகின்ற நிலையில், அவருக்கான சோதனைக் களமாகவே இத்தொடர் காணப்படப் போகின்றது. குறிப்பாக அவரது தனிப்பட்ட பெறுபேறுகளும் கவனமாக ஆராயப்படும்.
மறுபக்கமாக, நீண்ட காலமாக ODI-இல் களமிறங்கவுள்ள பாகிஸ்தான் தற்காலத்துக்கேற்றவாறு வேகமாகத் துடுப்பெடுத்தாட வேண்டியுள்ளது. அந்தவகையில், அணித்தலைவர் பாபர் அஸாம், மொஹமட் றிஸ்வான், பாஹீம் அஷ்ரப், ஆசிஃப் அலி ஆகியோர் முக்கியமான வீரர்களாகக் காணப்படுகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் ODIகளுக்கான அணிகளின் தரவரிசையில், ஐந்தாமிடத்தில் தென்னாபிரிக்காவும், ஆறாமிடத்தில் பாகிஸ்தானும் காணப்படுகின்ற நிலையில், தென்னாபிரிக்காவை 3-0 என பாகிஸ்தான் வெள்ளையடித்தால் ஐந்தாமிடத்துக்கு பாகிஸ்தான் முன்னேறும் என்பதோடு, ஆறாமிடத்துக்கு தென்னாபிரிக்கா கீழிறங்கும். மறுபக்கமாக, 3-0 என பாகிஸ்தானை தென்னாபிரிக்கா வெள்ளையடித்தால், அவ்வணி நான்காமிடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
2 minute ago
5 hours ago
8 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
5 hours ago
8 hours ago
26 Jan 2026