Editorial / 2026 ஜனவரி 19 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா
கிழக்கின் பழம் பெரும் கழகமான காரைதீவு விளையாட்டுக் கழகத்தினதும்( KSC) விபுலானந்த சனசமூக நிலையத்தினதும் 2026ம் ஆண்டுக்கான வருடாந்த தைப்பொங்கல் தின பீச் ( Beach Volleyball) கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி காரைதீவு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (18) அன்று மாலை இடம்பெற்றது.
அமரர் வைரமுத்து நல்ல ரத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக கழகத் உப தலைவர் எஸ்.ரதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக கழகப்போசர்களான உத்தரவு பெற்ற நில அளவையாளர் வி.ராஜேந்திரன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா , சி.நந்தகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு காரைதீவு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் வி.பாஸ்கரன் , இளைஞர் சேவை அதிகாரி எஸ்.ராதிந் ஆகியோருடன் கழக முன்னாள் தலைவர்கள் கழக நிர்வாக உறுப்பினர்கள் , சிரேஷ்ட கனிஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பல அணிகள் கலந்து கொண்ட சுற்று போட்டியில் இறுதி போட்டியில் கேஎஸ்ஸி இரு அணிகள் பங்கேற்றன
இம்முறை வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கான போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு கிண்ணங்கள் பரிசுகள் அதிதிகளால் வழங்கப்பட்டன.கழகச் செயலாளர் ஆர்.பிரகிலன்( ஆசிரியர்) நன்றியுரையாற்றினார்.









10 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago