2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தொடரும் கரி ஸ்டெட்

Freelancer   / 2023 ஜூலை 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக எதிர்வரும் 2025ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை கரி ஸ்டெட் தொடர்வாரென அந்நாட்டின் கிரிக்கெட் சபை நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

ஸ்டெட்டின் நடப்பு ஒப்பந்தமானது உலகக் கிண்ணத்துடன் முடிவடைவதாகக் காணப்பட்ட நிலையில், தற்போதையை நீடிப்பையடுத்து அடுத்தாண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம், 2025ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடர், நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் காலத்துக்கு அவரே தொடரவுள்ளார்.

முதலில் 2018ஆம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற ஸ்டெட்டின் கீழ் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணம், 2021ஆம் ஆண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துக்கு இறுதிப் போட்டி வரை முன்னறிய நியூசிலாந்து, 2021ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை வென்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .