2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

தொடரைக் கைப்பற்றப் போவது நியூசிலாந்தா? பங்களாதேஷா?

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான தீர்மானமிக்க மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது சட்டோகிராமில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை நியூசிலாந்தும் இரண்டாவது போட்டியை பங்களாதேஷும் வென்ற நிலையில் முதலிரண்டு போட்டிகளுக்கான ஆடுகளங்களும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாகக் காணப்பட்ட நிலையில் இப்போட்டிக்கான ஆடுகளமானது துடுப்பாட்டத்துக்குச் சாதகமானதாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்தின் அனுபவமிக்க ஹென்றி நிக்கொல்ஸ், வில் யங், டொம் லேதம் எதிர் பங்களாதேஷின் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, லிட்டன் தாஸ், செளமியா சர்கார், தெளஹிட் ஹிரிடோயிடையேயான மோதலே தொடரின் போக்கை தீர்மானிக்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .