Shanmugan Murugavel / 2026 ஜனவரி 26 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இலங்கையும், இரண்டாவது போட்டியை இங்கிலாந்தும் வென்ற நிலையில் குறித்த மூன்றாவது போட்டியே தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கவுள்ளது.
இலங்கையணி வீரர்கள் பெரிய இனிங்ஸ்களை ஆடாத நிலையில் கமில் மிஷாரவை சதீர சமரவிக்கிரம மற்றும் தனஞ்சைய டி சில்வாவை கமிந்து மென்டிஸ் மூலமும் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மறுபக்கமாக இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்கப்பட்ட றெஹான் அஹ்மட் மற்றும் ஜேக்கப் பெத்தெல் ஆகியோரிடமிருந்து குறிப்பிடத்தக்களவு ஓட்டங்களை எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியிலேயே ஆடுகளமானது இங்கிலாந்து வீரர்களால் விமர்சிக்கப்பட்ட நிலையில் இப்போட்டிக்கான ஆடுகளமும் சுழற்சியை வழங்கக்கூடிய 265 ஓட்டங்களைப் பெறக்கூடிய ஆடுகளமாக இருக்குமென்றே நம்பப்படுகின்றது.
இப்போட்டியில் ஜேக்கப் பெத்தெல்லை டொம் பன்டன் பிரதியிடக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
7 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago