2025 மே 17, சனிக்கிழமை

தொடரைக் கைப்பற்றுமா அவுஸ்திரேலியா?

Freelancer   / 2023 ஜூலை 26 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியானது ஓவலில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரை அவுஸ்திரேலியா ஏற்கெனவே தக்க வைத்துள்ள போதும் இப்போட்டியில் வென்றால் 2001ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் தொடரைக் கைப்பற்றலாமென்ற நிலையில் அதற்கு அவுஸ்திரேலியா முயலும்.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்த வரையில் மிற்செல் மார்ஷ் உடற்றகுதியுடன் இருந்தால் கமரொன் கிறீனை சுழற்பந்துவீச்சாளர் டொட் மேர்பி பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, உபாதையால் மிற்செல் ஸ்டார்க் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக மைக்கல் நேஸர் களமிறங்குவாரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்டுக்குப் பதிலாக ஜொஷ் டொங்க், ஒலி றொபின்ஸன் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .