Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், டாக்காவில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டையும் வென்றதைத் தொடர்ந்தே 2-0 என தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், ஜோஷுவா டா சில்வாவின் 92, என்குறுமஹ் பொன்னரின் 90, அல்ஸாரி ஜோசப்பின் 82, அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட்டின் 47, ஜோன் கம்பெல்லின் 36, ஜெர்மைன் பிளக்வூட்டின் 28 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 409 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், அபு ஜயேட், தஜியுல் இஸ்லாம் ஆகியோர் தலா நான்கு, மெஹிடி ஹஸன் மிராஸ் மற்றும் செளமியா சர்க்கார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், லிட்டன் தாஸின் 71, மெஹிடி ஹஸன் மிராஸின் 57, முஷ்பிக்கூர் ரஹீமின் 54, தமிம் இக்பாலின் 44 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ரஹீம் கொர்ன்வோல் ஐந்து, ஷனொன் கப்ரியல் மூன்று, அல்ஸாரி ஜோசப் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், என்குறுமஹ் பொன்னர் 38 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், தஜியுல் இஸ்லாம் நான்கு, நயீம் ஹஸன் மூன்று, அபு ஜயெட் இரண்டு, மெஹிடி ஹஸன் மிராஸ் ஒரு விக்கெடை வீழ்த்தினர்.
அந்தவகையில், 231 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், சகல விக்கெட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களையே பெற்று 17 ஓட்டங்களால் தோல்வியடந்தது. துடுப்பாட்டத்தில், தமிம் இக்பால் 50, மெஹிடி ஹஸன் மிராஸ் 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ரஹீம் கொர்ன்வொல் நான்கு, ஜோமெல் வொரிக்கான் மற்றும் கிறேய்க் பிறத்வெய்ட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக ரஹீம் கொர்ன்வோலும், தொடரின் நாயகனாக என்குறுமாஹ் பொன்னரும் தெரிவாகினர்.
14 minute ago
31 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
34 minute ago
41 minute ago