Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின், மேலதிக பங்கு வகிக்கமாட்டார் என அறிவிக்கப்படுகின்றது.
முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதலாவது போட்டியில் பங்குபற்றியிருக்காத நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்குபெறும் எதிர்பார்ப்பில் காணப்பட்டார்.
இந்நிலையிலேயே, அவரது கால், போதுமானளவு குணமாகியிருக்கவில்லை என்பதால், டெஸ்ட் தொடரிலிருந்து மாத்திரமன்றி, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்தும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்தும் ‡பின் வெளியேற்றப்பட்டுள்ளார்.
டெஸ்ட், ஒ.நா.ச.போட்டித் தொடருக்கான குழாமில், பின்னுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .