2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 24 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 3-2 என்ற ரீதியில் கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அணி சாதனை புரிந்துள்ளது. இதுவே டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள நாடொன்றுக்கு எதிராக துணை அங்கத்துவ நாடொன்று முதன்முறையாக ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை கைப்பற்றுவது ஆகும்.புலாவேயில் இடம்பெற்ற 5வது ஒருநாள் சர்வதேசப் போட்டியை ஆப்கானிஸ்தான் அணி 73 ஓட்டங்களால் வென்றமையை அடுத்தே இது சாத்தியமானது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் ஆப்கானிஸ்தான் அணியைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது.

இதில், அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் நூர் அலி சட்ரான் 54, மொஹமட் நபி 53 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக வெலிங்டன் மசகட்சா, சிகண்டர் ராசா தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 44.1 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது. இதில், சீன் வில்லியம்ஸ் மட்டும் 102 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக டவால்ற் சட்ரான் 4 விக்கெட்டுக்களையும் அமீர் ஹம்சா 3 விக்கெட்டுக்களையும் ரஷீத் கான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகர்களாக டவால்ற் சட்ரானும், சீன் வில்லியம்ஸும் தெரிவு செய்யப்பட்டதோடு, தொடரின் ஆட்டநாயகனாக மொஹமட் நபி தெரிவு செய்யப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .