Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மார்ச் 04 , பி.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றோமா, ஜுவென்டஸ் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
நாப்போலி அணியின் மைதானத்தில் அவ்வணியை றோமா எதிர்கொண்டது. இப்போட்டியின் ஆறாவது நிமிடத்தில் லொறென்ஸோ இன்சீனியா பெற்ற கோல் காரணமாக ஆரம்பத்திலேயே நாப்போலி முன்னிலை பெற்றது. எனினும் உடனடியாகவே சென்கிஸ் அன்டர் பெற்ற பதில் கோல் மூலம் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்திய றோமா, முதற்பாதி முடிவடைவதற்கு முன்பதாக எடின் டெஸ்கோ பெற்ற கோல் காரணமாக முன்னிலை பெற்றது.
பின்னர், இரண்டாவது பாதியில், அலெக்ஸான்டர் கொலரோவ்விடமிருந்து பெற்ற பந்தை கோலாக்கிய எடின் டெஸ்கோ, தனது அணியின் முன்னிலையை அதிகரித்ததோடு, டியகோ பெறோட்டி பெற்ற கோல் காரணமாக 4-1 என்ற கோல் கணக்கில் றோமா முன்னிலை பெற்றது. போட்டியின் இறுதிக் கணங்களில் ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் நாப்போலிக்காக கோலொன்றைப் பெற போட்டி முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் றோமா வென்றது.
இதேவேளை, லேஸியோவின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், இறுதி நேரத்தில் போலோ டிபாலா பெற்ற கோல் காரணமாக 1-0 என்ற கோல் கணக்கில் சீரி ஏயின் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் லேஸியோவை வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
30 minute ago