Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஜூலை 22 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
டோக்கியோ 2020 என அடையாளப்படுத்தப்படும் 32ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளானவை, ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நாளை ஆரம்பிக்கின்றன.
அடுத்த மாதம் எட்டாம் திகதி வரை நடைபெறவுள்ள குறித்த போட்டிகளில் 204 தேசங்களைச் சேர்ந்த 11,238க்கும் அதிகமான தடகளவீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாளைய ஆரம்ப நிகழ்வுடனேயே போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளபோதும், நேற்று சொஃப்ட்போல், கால்பந்தாட்டம் போன்ற ஆரம்பப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு நடைபெறவிருந்து கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்ட போட்டிகள் இரசிகர்கள் இல்லாமல் மூடிய அரங்களுக்குள்ளேயே நடைபெறவுள்ளன.
இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்துக்குள்ளேயே கொரோனாத் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இப்போட்டிகளை நிறுத்துவதற்கான சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், இலங்கையைப் பிரதிநிதுவப்படுத்தி எட்டு விளையாட்டுக்களில் ஒன்பது தடகளவீரர்கள் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மூன்று தடவைகள் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட நிலுக கருணாரட்ண தனிநபர் பூப்பந்தாட்டப் போட்டிகளிலும், றைஃபிள் சுடும்வீரராக தெஹானி எகொடவெலவும் கலந்து கொள்கின்றனர்.
நீச்சல் பக்கம் மத்தியூ அபேசிங்கவும், அனிஹா கஃபூரும் கலந்து கொள்கின்றனர். கஃபூர் உள்ளிட்ட ஐந்து வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஜிம்னாஸ்டிக்கில் மில்கா கெஹானியும், பெண்களுக்கான 800 மீற்ரர் ஓட்டப் போட்டியில் நிமாலி லியனராச்சியும் கலந்து கொள்கின்றனர்.
29 minute ago
33 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
33 minute ago
53 minute ago
1 hours ago