Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 25 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியானது, மெல்பேணில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
முதலாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்ஸில், டெஸ்ட் இனிங்ஸில் குறைந்த பட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்த இந்தியா, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற வேண்டுமாயின் உடனடியாக மீழெழ வேண்டியுள்ளது.
அதுவும், அணித்தலைவர் விராட் கோலி, பிரதான பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி இல்லாமல் மீள்வருகையை நிகழ்த்த வேண்டியுள்ளது. கோலிக்குப் பதிலாக ஷுப்மன் கில்லும், ஷமிக்குப் பதிலாக மொஹமட் சிராஜ்ஜும் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுமாறிவரும் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் பிறித்திவி ஷாவுக்கு இன்னுமொரு வாய்ப்பு வழங்கப்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. தவிர, இப்போடியிலும் றிஷப் பண்டை விட ரித்திமான் சஹாவே விக்கெட் காப்பாளராக விளையாடுவதற்காக அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இதேவேளை, டேவிட் வோணரின் காயம் குணமடையாத நிலையில், முதலாவது போட்டியில் விளையாடிய அதேயணியே இப்போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
26 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago