2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட குறித்த தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலியா, மெல்பேணில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டையும் வென்றமையைத் தொடர்ந்தே, ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

அவுஸ்திரேலியா: 467/10 (துடுப்பாட்டம்: ட்ரெவிஸ் ஹெட் 114, ஸ்டீவ் ஸ்மித் 85, டிம் பெய்ன் 79, மர்னுஸ் லபுஷைன் 63, டேவிட் வோணர் 41, மத்தியூ வேட் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 4/83, டிம் செளதி 3/103, கொலின் டி கிரான்ட்ஹொம் 2/68, ட்ரெண்ட் போல்ட் 1/91)

நியூசிலாந்து: 148/10 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 50 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 5/28, ஜேம்ஸ் பற்றின்சன் 3/34, மிற்செல் ஸ்டார்க் 2/30)

அவுஸ்திரேலியா: 168/5 (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் 38, ஜோ பேர்ண்ஸ் 35, மத்தியூ வேட் ஆ.இ 30, ட்ரெவிஸ் ஹெட் 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 3/50, மிற்செல் சான்ட்னெர் 1/22)

நியூசிலாந்து: 240/10 (துடுப்பாட்டம்: டொம் பிளன்டல் 121, ஹென்றி நிக்கொல்ஸ் 33, மிற்செல் சான்ட்னெர் 27, பி.ஜெ. வட்லிங் 22 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 4/81, ஜேம்ஸ் பற்றின்சன் 3/35, மர்னுஸ் லபுஷைன் 1/11)

போட்டியின் நாயகன்: ட்ரெவிஸ் ஹெட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .