Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியிலிருந்து பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம், துடுப்பாட்டவீரர் இமாம்-உல்-ஹக் ஆகியோர் விலகியுள்ளனர்.
பெருவிரல் காயங்களிலிருந்து குணமடையாமை காரணமாகவே இவர்கள் இருவரும் போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில், உப அணித்தலைவர் மொஹமட் றிஸ்வான் அணிக்கு தலைமை தாங்கவுள்ளார்.
இதேவேளை, குழாமில் புதுமுக துடுப்பாட்டவீரர் இம்ரான் பட் இடம்பெற்றுள்ளதோடு, சகலதுறைவீரர் பாஹீம் அஷ்ரப், துடுப்பாட்டவீரர் ஹரிஸ் சொஹைல் ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ளனர்.
குழாம்: மொஹமட் றிஸ்வான் (அணித்தலைவர்), அபிட் அலி, அஸார் அலி, பாஹீம் அஷ்ரஃப், பவாட் அலாம், ஹரிஸ் சொஹைல், இம்ரான் பட், மொஹமட் அப்பாஸ், நசீம் ஷா, சஃப்ராஹ் அஹ்மட், ஷடாப் கான், ஷகீன் ஷா அஃப்ரிடி, ஷண் மசூட், சொஹைல் கான், யசீர் ஷா.
14 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago