Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், நியூசிலாந்து இறுதியாகப் பங்கேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான, இந்தியாவுக்கெதிரான தொடரில் பங்கேற்ற குழாமில் இடம்பெறாத வேகப்பந்துவீச்சாளர் லொக்கி பெர்கியூஸன், சுழற்பந்துவீச்சாளர் டொட் அஸ்டில் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை, கவட்டுப் பகுதியில் ஏற்பட்ட உபாதையிலிருந்து குணமடையாமை காரணமாக மார்ட்டின் கப்தில் இத்தொடரைத் தவறவிடுகின்றார். இந்நிலையில், மார்ட்டின் கப்திலுக்குப் பதிலாக ஜோர்ஜ் வேர்க்கர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொடரின் முதலாவது போட்டியில் மட்டுமே அணித்தலைவர் கேன் வில்லியம்சனும் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் டிம் செளதியும் விளையாடவுள்ளன. இரண்டாவது, மூன்றாவது போட்டியில் இவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பதிலாக இரண்டாவது, மூன்றாவது போட்டிகளில் மிற்செல் சான்ட்னெர் இடம்பெற்றுள்ளனர். இரண்டாவது, மூன்றாவது போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு டொம் லேதம் தலைமை தாங்குகிறார்.
குழாம்: கேன் வில்லியன்சன் (அணித்தலைவர்), டிம் செளதி [இருவரும் முதலாவது போட்டிக்கு மட்டும்], டொட் அஸ்டில், ட்ரெண்ட் போல்ட், கொலின் டி கிரான்ட்ஹொம், லொக்கி பெர்கியூஸன், மற் ஹென்றி, டொம் லேதம், அடம் மில்ன், கொலின் மன்றோ, ஹென்றி நிக்கொல்ஸ், ஜோர்ஜ் வேர்க்கர்.
நீல் ப்றூம், மிற்செல் சான்ட்னெர் (இரண்டாவது, மூன்றாவது போட்டிக்கு மட்டும்)
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago