2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 22 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், நாக்பூரில் புதன்கிழமை (21) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, அபிஷேக் ஷர்மாவின் 84 (35), ரிங்கு சிங்கின் ஆட்டமிழக்காத 44 (20), அணித்தலைவர் சூரியகுமார் யாதவ்வின் 32 (22), ஹர்திக் பாண்டியாவின் 25 (16) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி 4-0-27-2 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.

பதிலுக்கு 239 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, அர்ஷ்டீப் சிங், ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி (2), அக்ஸர் பட்டேல், ஷிவம் டுபேயிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்று 48 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. கிளென் பிலிப்ஸ் 78 (40), மார்க் சப்மன் 39 (24), டரைல் மிற்செல் 28 (18), டிம் றொபின்சன் 21 (15), சான்ட்னெர் ஆட்டமிழக்காமல் 20 (13) ஓட்டங்களைப் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகனாக அபிஷேக் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X