Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மார்ச் 18 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வேயில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் நெதர்லாந்து ஏழாமிடம் பெற்றது.
கெவெக்கேயில் நேற்று இடம்பெற்ற ஏழாமிடத்துக்கான போட்டியில் நேபாளத்தை வென்றே நெதர்லாந்து ஏழாமிடத்தைப் பெற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணியின் தலைவர் பீற்றர் பொரன் தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பஸ் டி லீட் 39 (91), மக்ஸ் ஓ டெளட் 28 (44), ஸ்கொட் எட்வேர்ட்ஸ் 25 (27) றொலீவ் வான் டேர் மேர்வி 25 (46) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சொம்பல் கமி 4, லைத் ராஜ்பன்ஷி, சந்தீப் லமிச்சன்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 190 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நேபாளம், 44.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று 45 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், சொம்பல் கமி 36 (53), டிபேந்திர சிங் ஐரே 25 (38), பர்காஸ் கட்கா 22 (37), சந்தீப் லமிச்சன்னே 14 (38) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், றொலீவ் வான் டேர் மேர்வி 4, பிரெட் கிளாசென், பீற்றர் சீலர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக றொலீவ் வான் டேர் மேர்வி தெரிவானார்.
இந்நிலையில், இப்போட்டியில் தோற்றபோதும் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற போட்டியில் பப்புவா நியூ கினியை வென்றமையைத் தொடர்ந்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கான அங்கிகாரத்தை நேபாளம் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
41 minute ago
1 hours ago