Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரரான போல் பொக்பா, பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுக்குச் செல்வது பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் நெய்மரால் முடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாரமொன்றுக்கு 429,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை பெறும் ஒப்பந்தமொன்றுக்கு பரிஸ் ஸா ஜெர்மைனுடன் பிரான்ஸ் சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் மத்தியகளவீரரான போல் பொக்பா இணங்கியபோதும், தனது முன்னாள் கழகமான ஸ்பானிய லா லிகாக் கழகமான பார்சிலோனாவுக்கு நெய்மர் செல்லாததால் குறித்த நகர்வு முடங்கியதாகக் கூறப்படுகிறது.
பரிஸ் ஸா ஜெர்மைன் தவிர பார்சிலோனா, இன்னொரு ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் ஆகியனவும் போல் பொக்பாவை இப்பருவகாலத்தில் கைச்சாத்திட ஆர்வமாயிருந்த நிலையில், அவரது ஒப்பந்த நீடிப்பு பற்றி அவரது முகவர்களுடன் மன்செஸ்டர் யுனைட்டெட் கலந்துரையாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
38 minute ago
45 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
45 minute ago
49 minute ago
1 hours ago