2025 மே 17, சனிக்கிழமை

நேபாளத்தை வென்று அரையிறுதியில் இந்தியா

Freelancer   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் நடைபெற்று வரும் ஆசியப் போட்டிகளின் ஆண்களுக்கான கிரிக்கெட்டில்
அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

ஹங்சூவில் நேற்று நடைபெற்ற நேபாளத்துடனான முதலாவது காலிறுதிப் போட்டியில்
வென்றமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 202/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: யஷஸ்வி ஜைஸ்வால் 100 (49), ரிங்கு சிங் ஆ.இ 37
(15), ஷிவம் டுபே ஆ.இ 25 (19), ருத்துராஜ் கைகவாட் 25 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிபேந்திர
சிங் ஐரீ 2/31 [4])

நேபாளம்: 179/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டிபேந்திர சிங் ஐரீ 32 (15), சுந்தீப் ஜொரா 29 (12),
குஷால் மல்லா 29 (22), குஷால் புர்டேல் 28 (32), கரன் கே.சி ஆ.இ 18 (13) ஓட்டங்கள்.

பந்துவீச்சு: ரவி பிஷ்னோய் 3/24 [4], ஆவேஷ் கான் 3/32 [4], சாய் கிஷோர் 1/25 [4])
இதேவேளை இரண்டாவது காலிறுதிப் போட்டியில் ஹொங் கொங்கை வீழ்த்திய பாகிஸ்தானும்
அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள மூன்றாவது காலிறுதிப் போட்டியில்
ஆப்கானிஸ்தானை இலங்கை எதிர்கொள்ளவுள்ளதுடன், முற்பகல் 11.30 மணிக்கு
நடைபெறவுள்ள நான்காவது காலிறுதிப் போட்டியில் மலேஷியாவை பங்களாதேஷ்
எதிர்கொள்ளவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .