Shanmugan Murugavel / 2015 நவம்பர் 24 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. நாக்பூரில் இடம்பெறவுள்ள இப்போட்டி, காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இத்தொடரின் முதலாவது போட்டியில் மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்ற இந்திய அணி, ஒரு நாள் மாத்திரமே போட்டி இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும், முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில், அதிகபட்ச தன்னம்பிக்கையுடன் அவ்வணி களமிறங்குகிறது.
மறுபுறத்தில், தன்னம்பிக்கை குறைவான நிலையில் களமிறங்கவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு, அவ்வணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னின் உடல்நிலை, குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. முதலாவது போட்டியில் ஏற்பட்ட காயத்திலிருந்து அவர், இன்னமும் குணமடையாத நிலையிலேயே, இப்போட்டியில் விளையாடுவாரா, இல்லையா என்ற முடிவு, நாளை காலையிலேயே எடுக்கப்படவுள்ளது.
வழக்கமான நாக்பூர் ஆடுகளம், துடுப்பாட்டத்துக்குச் சாதகமான ஆடுகளமாகக் காணப்படும் போதிலும், இப்போட்டிக்கான ஆடுகளம், சுழற்பந்து வீச்சுக்குத் சாதகமானதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, இந்தியாவின் விளையாடும் பதினொருவரில், ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறங்குவரென்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago