2021 மே 08, சனிக்கிழமை

பாக்குநீரிணை நீந்தி கடந்த இரண்டாவது வீரர்

Editorial   / 2021 ஏப்ரல் 11 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரரான ரோசன் அபேசுந்தர, பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை நேற்று (10)   சனிக்கிழமை அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்தார்.

-இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரரொருவரின் 50 வருடங்கள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர்  ரோசன் அபேசுந்தர, நீச்சல் பயணத்தை ஆரம்பித்திரு்நதார்.

நேற்று (10) சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தலைமன்னார் இறங்கு துறையில் இருந்து  பாக்கு நீரிணையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார். அவர், தனுஸ் கோடியை சென்றடைந்து மீண்டும் அங்கிருந்து   தலைமன்னார் நோக்கி நீந்திவருவார்.

இன்று (11) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அவர், தலைமன்னாருக்கு திரும்பியுள்ளார்.

நீந்திச் சென்று நீந்தியே வருவதற்கு அவர், 28 மணிநேரமும் 19 நிமிடங்களையும் எடுத்துக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X