2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

பங்களாதேஷை வெள்ளையடித்த ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பங்களாதேஷை ஆப்கானிஸ்தான் வெள்ளையடித்தது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்றிருந்த ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என்ற ரீதியில் பங்களாதேஷை ஆப்கானிஸ்தான் வெள்ளையடித்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், இப்ராஹிம் ஸட்ரானின் 95 (111), மொஹமட் நபியின் ஆட்டமிழக்காத 62 (37), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸின் 42 (44), செதிகுல்லா அட்டலின் 29 (47), அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் 20 (21) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது. சைஃப் ஹஸன் 3, தன்வீர் இஸ்லாம் 2, அணித்தலைவர் மெஹிடி ஹஸன் மிராஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 294 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஓமர்ஸாய், பிலால் சமி (5), ரஷீட் கானிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து  27.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று 200 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. சைஃப் ஹஸன் 43 (54) ஓட்டங்களைப் பெற்றார்.

இப்போட்டியின் நாயகனாக பிலால் சமியும், தொடரின் நாயகனாக இப்ராஹிம் ஸட்ரானும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .