Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷின் புதிய வேகப்பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக, தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான சார்ள் லாங்வெல்ட் செயற்படவுள்ளார். இரண்டாண்டு ஒப்பந்தமொன்றில் முழுநேரமாக பங்களாதேஷுடன் லாங்வெல்ட் இணையவுள்ளார்.
இதேவேளை, பங்களாதேஷின் சுழற்பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக, நியூசிலாந்தின் முன்னாள் தலைவர் டானியல் விற்றோரியை குறுகிய கால அடிப்படையில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. இந்தியாவுக்கான சுற்றுப்பயணம், அடுத்தாண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சுழற்பந்துவீச்சு முகாம்களை நடாத்துதல் உள்ளடங்கலாக 100 பணி நாட்களுக்கு பங்களாதேஷுடன் வெற்றோரி இருக்கவுள்ளார்.
உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்காத பங்களாதேஷின் முன்னாள் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் கொட்னி வோல்ஷ், சுழற்பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் சுனில் ஜோஷி ஆகியோரையே லாங்வெல்டும், வெற்றோரியும் பிரதியீடு செய்கின்றனர்.
நேற்று இட்மபெற்ற தமது பணிப்பாளர் சபை கூட்டத்தின்போதே மேற்கூறப்பட்ட நியமனங்களை வழங்கியிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, சிரேஷ்ட தேர்வாளர்களான மின்ஹஜுல் அபெடின், ஹபிபுல் பஷாரின் ஒப்பந்தங்களை புதுப்பிக்கத் தீர்மானித்ததுடன், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் நீல் மக்கென்ஸின் பதவிக்காலத்தை அடுத்தாண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் வரை நீடித்துள்ளது.
இந்நிலையில், பங்களாதேஷின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவி இன்னும் வெற்றிடமாகவுள்ள நிலையில், தாங்கள் சில பயிற்சியாளர்களுடன் கதைத்ததாகவும், இங்கிலாந்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் அன்டி பிளவர் அவர்களிலொருவர் எனவும் ஆனால் எதுவும் இறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தாங்கள் இன்னும் பயிற்சியாளர்களுடன் கதைத்துக் கொண்டிருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் தெரிவித்துள்ளார்.
4 minute ago
28 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
28 minute ago
3 hours ago
7 hours ago