Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 12 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் சனிக்கிழமை (11) நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், தன்ஸிம் ஹஸன் சகிப் (2), தன்வீர் இஸ்லாம், அணித்தலைவர் மெஹிடி ஹஸன் மிராஸ் (3), ரிஷாட் ஹொஸைனிடம் (2) விக்கெட்டுகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் பறிகொடுத்த நிலையில் இப்ராஹிம் ஸட்ரானின் 95 (140) ஓட்டங்களோடு 44.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 191 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் (3), ரஷீட் கான் (5), நன்கெயலியா கரோட்டோவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 28.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களையே பெற்று 81 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஸட்ரான் தெரிவானார்.
52 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago