2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாதம் ஆரம்பிக்கவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நேற்றிரவு நடைபெற்ற பங்களாதேஷுடனான போட்டியில் இலங்கை வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், செளமியா சர்க்காரின் 34 (26) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், நான்கு ஓவர்களை வீசியிருந்த துஷ்மந்த சமீர, 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு. 148 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 12 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தபோதும், அவிஷ்க பெர்ணான்டோவின் ஆட்டமிழக்காத 62 (42), சாமிக கருணாரத்ன ஆட்டமிழக்காத 29 (25) ஓட்டங்களோடு, 19 ஓவர்களில் மேலதிகமாக விக்கெட் எதுவையும் இழக்காமல் வென்றது. பந்துவீச்சில், செளமியா சர்க்கார் மூன்று ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .