Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 31 , மு.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் (ODI) தொடரின் மூன்றாவது போட்டி, கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே கைப்பற்றியுள்ள இலங்கை தொடரில் 2-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையை இலங்கை பெற்றுள்ள நிலையில், தொடரைப் பொறுத்த வரையில் இப்போட்டி முக்கியமற்றதாய் அமைந்தாலும், இரண்டு அணிகளைப் பொறுத்தவரையிலும் இப்போட்டி முக்கியமானதாகக் காணப்படுகிறது.
அதிலும், குறிப்பாக பங்களாதேஷுக்கும், பங்களாதேஷின் சிரேஷ்ட வீரர்கள் மகமதுல்லா, பதில் அணித்தலைவர் தமிம் இக்பால் போன்றோருக்கு இப்போட்டி முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
ஏனெனில், அண்மைக் காலமாக தமிம் இக்பால், மகமதுல்லா ஆகியோர் தொடர்ச்சியாக பெறுபேற்றை வெளிப்படுத்தத் தவறியுள்ள நிலையில் இவர்கள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. எதிர்காலங்களில் அணியில் தமது இடங்களை உறுதிப்படுத்துவதற்கு இவர்களிருவரும், செளமியா சர்க்காரும் விரைவாக பெரிய ஓட்ட எண்ணிக்கையை பெறுவது மட்டுமல்லாமல் தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திலுள்ளனர்.
மறுபக்கமாக, அஞ்சலோ மத்தியூஸ், குசல் மென்டிஸ், அவிஷ்க பெர்ணான்டோ, குசல் பெரேராவில் இலங்கை பிரகாசிக்கத் தொடங்கியுள்ளபோதும் இவர்களிலிருந்து தொடர்ச்சியான பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுவதோடு, அணித்தலைவரான திமுத் கருணாரத்னவும் துடுப்பாட்டத்தில் தனது பெறுபேற்றை வெளிப்படுத்த வேண்டிய நிலையிலுள்ளார்.
இந்நிலையில், தொடரை இலங்கை ஏற்கெனவே கைப்பற்றியுள்ள நிலையில், அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, நுவான் பிரதீப் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு ஷெகான் ஜெயசூரிய, வனிடு ஹசரங்க, தசுன் ஷானக ஆகியோருக்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
மறுபக்கமாக, பங்களாதேஷில் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் செளமியா சர்க்காரை அனாமுல் ஹக் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதுடன், தஜியுல் இஸ்லாமுக்காக்க ஃபர்ஹாட் றீஸா இப்போட்டியில் விளையாடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
8 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
4 hours ago
8 hours ago