Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 22 , பி.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பங்கேற்கையில், முதலிரண்டு போட்டிகளுக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான குழாமில், முதற்தடவையாக துடுப்பாட்டவீரர் மொசாதிக் ஹொஸைன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். தவிர, வேகப்பந்து வீச்சாளர் ஷபிகுல் குழாமுக்கு திரும்பியுள்ளார். எவ்வாறெனினும் வேகப்பந்துவீச்சாளர் அல்-அமின் ஹொஸைன் குழாமில் இடம்பெறவில்லை.
இது தவிர, கடந்த நவம்பரில் இடம்பெற்ற சிம்பாப்வேக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருக்காத வேகப்பந்துவீச்சாளர் ருபெல் ஹொஸைன், சுழற்பந்துவீச்சாளர் தஜிகுல் இஸ்லாம் ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ளனர்.
இதேவேளை, வேகப்பந்துவீச்சாளர் முஸ்டாபிசுர் ரஹ்மான், காயமடைந்த காரணமாக குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.
குழாம்: தமீம் இக்பால், சௌமியா சர்க்கார், இம்ரல் கைஸ், மொசாதிக் ஹொஸைன், ஷகிப் அல் ஹஸன் (உபதலைவர்), மஹ்முதுல்லா, நசீர் ஹொஸைன், முஷ்திபிகார் ரஹீம், சபீர் ரஹ்மான், தஜிகுல் இஸ்லாம், மஷ்ரபி மோட்டார்சா (தலைவர்), ஷபிகுல் இஸ்லாம், ருபெல் ஹொஸைன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .