2025 மே 21, புதன்கிழமை

பஞ்சாப்பை மயிரிழையில் வீழ்த்திய ராஜஸ்தான்

Editorial   / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று இரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் மயிரிழையில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ராஜஸ்தான், எவின் லூயிஸின் 36 (21), யஷஸ்வி ஜைஸ்வல்லின் 49 (36) ஓட்டங்கள் மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றதுடன், லியாம் லிவிங்ஸ்டோனின் 25 (17), மஹிபால் லொம்ரோரின் 43 (17) ஓட்டங்கள் மூலம்
இனிங்ஸை வேகமாக நகர்த்தியது.

பின்னர் மொஹமட் ஷமியின் 3, அர்ஷ்டீப் சிங்கின் 5, ஹர்பிறீட் பிறாரின் ஒரு விக்கெட் உள்ளடங்கலான கட்டுக்கோப்பான பந்துவீச்சால், 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை ராஜஸ்தான் பெற்றது.

பதிலுக்கு, 186 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப், லோகேஷ் ராகுலின் 49 (33), மாயங்க் அகர்வாலின் 67 (43) ஓட்டங்கள் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றதுடன், ஏய்டன் மர்க்ரமின் ஆட்டமிழக்காத 26 (20), நிக்கலஸ் பூரானின் 32 (22) ஓட்டங்களுடன் வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தது.

எவ்வாறெனினும், இறுதி இரண்டு ஓவர்களில் முஸ்தபிசூர் ரஹ்மான், கார்த்திக் தியாகி ஆகியோர் எட்டு ஓட்டங்கள் பெறப்படவிருந்த நிலையில், நான்கு ஓட்டங்களுடன் மட்டுப்படுத்த, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களையே பஞ்சாப் பெற்று இரண்டு
ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக கார்த்திக் தியாகி தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .