2025 மே 21, புதன்கிழமை

பதக்கம் வென்றோர் நாட்டை வந்தடைந்தனர்

Freelancer   / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித துலன் கொடித்துவக்கு ஆகியோர், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று மாலை வந்தடைந்தனர்.

ஜப்பானின் நரிடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் இன்று மாலை 4.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் விளையாட்டு வீரர்களை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .