Shanmugan Murugavel / 2016 மே 18 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை 'ஏ" அணியின் பயிற்றுநராக, இலங்கை அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அவிஷ்க குணவர்தனவும், 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்றுநராக, முன்னாள் வீரரும் இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுநருமான றோய் டயஸூம் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு அணிகளும், எதிர்வரும் ஜூலை மாதத்தில், இங்கிலாந்துக்கான சுற்றுத் தொடரை மேற்கொள்ளவுள்ளதோடு, 19 வயதுக்குட்பட்டோர் அணி, அதன் பின்னர் தென்னாபிரிக்காவுக்கும் செல்லவுள்ளது.
இலங்கைக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 61 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அவிஷ்க குணவர்தன, 19 வயதுக்குட்பட்ட அணியின் உதவிப் பயிற்றுநராகச் செயற்பட்டிருந்தார்.
இலங்கைக்காக 20 டெஸ்ட் போட்டிகள், 58 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய டயஸ், 1998ஆம் ஆண்டு, இலங்கையின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பின்பு அவர், ஓமான், நேபாளம் ஆகிய அணிகளுக்கும் பயிற்றுநராகச் செயற்பட்டிருந்தார்.
3 minute ago
14 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
1 hours ago
2 hours ago