S.Renuka / 2026 ஏப்ரல் 08 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும், தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.
சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் ஸ்ருதி ஹாசன் இதுவரை 5 நபருடன் காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பின்னர் பிரிந்துவிட்டார்.
ஆரம்பத்தில் லண்டனை மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்து பிரிந்தார். அதன் பின்னர் விளம்பர படங்களில் நடித்த போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து அவரை பிரிந்தார். அதன் பின்னர் ஓ மை பிரண்ட் படத்தில் நடித்த போது நடிகர் சித்தார்த்தை காதலித்து பின்னர் பிரேக்கப் செய்தார்.
அதன் பிறகு தெலுங்கு நடிகர் நாகா சைதன்யாவை ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது காதலித்து அவரையும் கழட்டிவிட்டார். அதன் பின்னர் தற்போது டூடுல் ஆர்ட்டிஸ்ட் சாந்தனு ஹசாரிக்கா என்பவரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.
13 minute ago
37 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
37 minute ago
39 minute ago
1 hours ago