2025 ஜனவரி 25, சனிக்கிழமை

பிரான்ஸ் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் டிஷம்ஸ்

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 08 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தேசிய கால்பந்தாட்ட அணியின் நீண்ட காலம் பயிற்றுவிப்பாளராக இருக்கும் டிடியன் டிஷம்ஸின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க அவர் எதிர்பார்க்கவில்லையென அந்நாட்டு கால்பந்தாட்ட சம்மேளனம் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற டிஷம்ஸின் ஒப்பந்தமானது எதிர்வரும் 2026ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ணத் தொடருடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த டிஷம்ஸ், 2022ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரையில் அழைத்துச் சென்றிருந்தார். தவிர, 2021ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X