2026 மார்ச் 18, புதன்கிழமை

பிரேஸில் குழாமில் நெய்மர் இல்லை

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 17 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ், குரோஷியாவுக்கெதிரான சிநேகபூர்வ போட்டிகளுக்கான பிரேஸில் குழாமில் நெய்மர் இடம்பெறவில்லை. உலகக் கிண்ணத்துக்கான குழாமை பிரேஸில் அறிவிக்க முன்னரான பிரேஸிலின் இறுதிப் போட்டிகள் இவையாகும்.

இந்நிலையில் திங்கட்கிழமை (16) குழாம் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் ஏமாற்றம், கவலையடைந்தாக நெய்மர் கூறியுள்ளார். நெய்மர் 100 சதவீதம் இல்லை; அதனாலேயே பட்டியலில் அவர் இல்லை என பிரேஸிலின் பயிற்சியாளர் கார்லோ அன்சிலோட்டி குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக 2023ஆம் ஆண்டு ஒக்டோபரிலே பிரேஸிலுக்கான நெய்மர் விளையாடியிருந்தார்.

இதேவேளை பிரேஸில் குழாமில் அன்சிலோட்டி பதவியேற்ற பின்னர் முதற்தடவையாக என்ட்றிக் இடம்பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X