Shanmugan Murugavel / 2024 ஜூலை 31 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் உளப் பிரச்சினைகள் காரணமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் விலகியிருந்த ஐக்கிய அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோனே பைல்ஸ், தனது அபார திறமை மூலம் பரிஸ் 2024ஆம் ஆண்டு போட்டிகளில் ஐக்கிய அமெரிக்க அணிக்கு முதலாவது தங்கத்தை அவர் வென்று கொடுத்திருந்தார். ரியோ 2016-இல் 27 வயதான பைல்ஸ் வென்ற நான்கு தங்கப் பதக்கங்களுடன் இது ஐந்தாவது தங்கப் பதக்கமாகும்.
இந்நிலையில் பதக்கப் பட்டியலில் 7 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் முதலாமிடத்தில் ஜப்பான் உள்ளது. 6 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாமிடத்தில் பிரான்ஸும், 6 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் சீனாவும், 6 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் நான்காமிடத்தில் அவுஸ்திரேலியாவும் காணப்படுகின்றன. 5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றது.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026