2025 மே 21, புதன்கிழமை

பரிஸ் ஸா ஜெர்மைனுடன் கைச்சாத்திட்ட மெஸ்ஸி

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்னாள் வீரரான லியனல் மெஸ்ஸியைக் கைச்சாத்திட்டதை பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் உறுதிப்படுத்தியுள்ளது. 

பரிஸ் ஸா ஜெர்மைனுடன் மேலதிக ஆண்டொன்றுக்கு நீடிக்கும் தெரிவையுடைய இரண்டாண்டு ஒப்பந்தத்தில் மெஸ்ஸி கைச்சாத்திட்டுள்ளார். 

ஆண்டொன்றுக்கு 30 தொடக்கம் 35 மில்லியன் யூரோக்களை ஊதியமாக மெஸ்ஸி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், 30ஆம் இலக்க சீருடையை மெஸ்ஸி அணியவுள்ளார். 10ஆம் இலக்கத்தை நெய்மர் வழங்கியபோதும் மெஸ்ஸி மறுத்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .