Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
திங்கட்கிழமை (06) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற ஜமைக்காவின் கிஷேன் தொம்ஸனை விட 1000-இல் 5 மில்லி செக்கன்கள் குறைவாக போட்டித் தூரத்தைக் கடந்தே லைல்ஸ் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
போட்டித் தூரத்தை 9.79 (.784) செக்கன்களில் கடந்து 27 வயதான லைல்ஸ் தங்கப் பதக்கத்தையும், 9.79 (0.789) செக்கன்களில் கடந்து 23 வயதான தொம்ஸன் வெள்ளிப் பதக்கத்தையும், 9.81 செக்கன்களில் கடந்து ஐக்கிய அமெரிக்காவின் பிரட் கேர்லி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
31 minute ago
45 minute ago