Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் புட்போல் சஞ்சிகையால் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை குரோஷியாவினதும் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டினது மத்தியகள வீரரான லூகா மோட்ரிட்ச் வென்றுள்ளார்.
அந்தவகையில், பிரேஸிலினதும் றியல் மட்ரிட்டினதும் முன்னாள் மத்தியகள வீரரான காகா, 2007ஆம் ஆண்டு பலூன் டோர் விருதை வென்றபின்னர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியனல் மெஸ்ஸியைத் தவிர்த்து குறித்த விருதைப் பெறும் முதலாவது வீரராக தன்னை மோட்ரிட்ச் பதிவுசெய்துகொண்டார்.
குரோஷிய அணியின் தலைவரான மோட்ரிச், இவ்வாண்டு மேயில் சம்பியன்ஸ் லீக்கை வென்றிருந்ததுடன், பின்னர் குரோஷியா தமது முதலாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை செல்ல உதவியிருந்தார்.
ஊடகவியலாளர்களால் அளிக்கப்படும் வாக்குகளின் அடிப்படையில் இவ்விருதின் வெற்றியாளர் தெரிவுசெய்யப்படுகின்ற நிலையில் 33 வயதான மோட்ரிட்ச் வெற்றியாளராகத் தெரிவாகிய நிலையில், போர்த்துக்கல்லினதும் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸினதும் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தார்.
பிரான்ஸினதும் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டினதும் முன்கள வீரரான அன்டோனி கிறீஸ்மன் மூன்றாமிடத்தைப் பெற்றதோடு, பிரான்ஸினதும் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனினதும் முன்கள வீரரான கிலியான் மப்பே நான்காமிடத்தைப் பெற்றநிலையில், ஆர்ஜென்டீனாவினதும் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்கள வீரரான லியனல் மெஸ்ஸி ஐந்தாமிடத்தைப் பெற்றிருந்தார்.
இதேவேளை, இவ்வாண்டே முதன்முறையாக வழங்கப்பட்ட ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை நோர்வேயினதும் பிரெஞ்சுக் கழகமான லயோனினதும் முன்கள வீராங்கனையான ஏடா ஜூக்பேர்க் வென்றார். 23 வயதான இவர் இவ்வாண்டில் சம்பியன்ஸ் லீக்கை வென்றிருந்தார்.
இந்நிலையில், ஏடா ஜூக்பேர்க் குறித்த விருதைப் பெறும்போது குறித்த விருது வழங்கும் நிகழ்வை தொகுத்து வழங்கிய மார்ட்டின் சொல்வெய்க், பாலியல் உணர்வைத் தூண்டக்கூடியவாறு இடுப்பை வளைத்து நெழித்து நடனமான முடியுமா அவரை வினவியிருந்தமை பலத்த விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
இதேவேளை, ஆண்டின் சிறந்த 21 வயதுக்குட்பட்ட வீரரான, 19 வயதான கிலியான் மப்பே தெரிவாகியிருந்தார். மப்பே இவ்வாண்டு உலகக் கிண்ணத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருதானது, முன்னாள் பலூன் டோர் வெற்றியாளர்களால் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.
6 hours ago
7 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
03 Oct 2025