2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் 145 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது அவுஸ்திரேலியா

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் நேற்று ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களையே அவுஸ்திரேலியா பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட பக்கர் ஸமன் 94, அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் 94, யசீர் ஷா 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில், நேதன் லையன் 4, மர்னுஸ் லபுஷைன் 3, மிற்செல் ஸ்டார்க் 2, மிற்செல் மார்ஷ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களையே இன்று பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில், ஆரோன் பின்ஞ் 39, மிற்செல் ஸ்டார்க் 34, மர்னுஸ் லபுஷைன் 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹமட் அப்பாஸ் 5, பிலால் ஆசிப் 3, யசீர் ஷா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X