Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 10 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஏழாமிடத்துக்கு இலங்கை முன்னேறியுள்ளது.
பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக எட்டாமிடத்தில் காணப்பட்டிருந்த இலங்கை, லாகூரில் நேற்றிரவு இடம்பெற்ற மூன்றாவது போட்டியையும் வென்று, 3-0 என பாகிஸ்தானை இலங்கை வெள்ளையடித்தமையைத் தொடர்ந்தே எட்டாமிடத்திலிருந்து ஓர் இடம் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, ஆரம்பத்திலேயே தமது ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் தனுஷ்க குணதிலக, சதீர சமரவிக்கிரம, பானுக ராஜபக்ஷ, அஞ்சலோ பெரேராவை இழந்து எட்டு ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 58 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
எனினும், அணித்தலைவர் தசுன் ஷானகவின் துணையோடு, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட ஒஷாட பெர்ணான்டோ ஆட்டமிழக்காமல் பெற்ற 78 (48) ஓட்டங்கள் காரணமாக 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றிருந்தது. பந்துவீச்சில், மொஹமட் ஆமிர் 3, இமாட் வசீம், வஹாப் றியாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.
இந்நிலையில், பதிலுக்கு 148 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், தமது இனிங்ஸின் முதலாவது பந்திலேயே தமது ஆரம்பத்துடுப்பாட்டவீரர் ஃபக்கர் ஸமனை கசுன் ராஜிதவிடம் இழந்தது. எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த பாபர் அஸாமின் 27 (32), ஹரீஸ் சொஹைலின் 52 (50) ஓட்டங்கள் மூலம் பாகிஸ்தானின் இனிங்ஸ் நகர்ந்தபோதும் இவர்களும், இமாட் வசீம், ஆசிஃப் அலி, அணித்தலைவர் சப்ராஸ் அஹ்மட் ஆகியோர் தொடர்ந்து லஹிரு குமார, வனிடு ஹசரங்கவிடம் வீழ்ந்தனர்.
அந்தவகையில் இறுதயில் இஃப்திஹார் அஹ்மட் ஆட்டமிழக்காமல் 17 (08), வஹாப் றியாஸ் ஆட்டமிழக்காமல் 12 (06) ஓட்டங்களைப் பெற்றபோதும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களையே பெற்ற பாகிஸ்தான் 13 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.
26 minute ago
28 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
39 minute ago