2025 மே 16, வெள்ளிக்கிழமை

பார்சிலோனா செல்லும் டிபாலா?

Mayu   / 2024 மார்ச் 09 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான றோமாவின் முன்களவீரரான போலோ டிபாலாவைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. 

றோமாவுக்காக நடப்புப் பருவகாலத்தில் 30 வயதான டிபாலா13 கோல்களைப் பெற்றதோடு, ஏழு கோல்களைப் பெறுவதற்கு உதவி புரிந்துள்ளார்.

இத்தாலிக்கு வெளியேயுள்ள கழகங்கள் டிபாலாவைக் கைச்சாத்திட வேண்டுமென்றால், 12 மில்லியன் யூரோக்களைச் செலுத்த வேண்டும் என்ற சரத்தை றோமாவுடனான தனது ஒப்பந்தத்தில் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .