2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பார்சிலோனா – வலென்சியா போட்டி சமநிலை

Editorial   / 2017 நவம்பர் 27 , பி.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், பார்சிலோனா, வலென்சியா அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோர்டி அல்பா பெற்றதோடு, வலென்சியா சார்பாகப் பெறப்பட்ட கோலை றொட்றிகோ பெற்றார்.

இப்போட்டியில், லியனல் மெஸ்ஸி உதைத்த உதையொன்று, வலென்சியாவின் கோல் காப்பாளர் நெட்டோவின் கைகளுக்குள் சென்று கோல் எல்லையைக் கடந்த பின்னர் பந்தை கோல் கம்பத்துக்கு வெளியே நெட்டோ தள்ளியிருந்தார். இதன்போது பெனால்டி எல்லைக்கு வெளியேயிருந்த மத்தியஸ்தர் இதை கோலாக அனுமதிக்காது போட்டியைத் தொடர அனுமதித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .