Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸின் தலைநகர் பரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியனான ரஃபேல் நடால் தகுதிபெற்றுள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜனிக் சின்னரை எதிர்கொண்ட உலகின் இரண்டாம்நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடால், 7-6 (7-4), 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், நேற்றிரவு நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் டியகோ ஸ்வார்ட்ஸ்மான்னை எதிர்ர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தியெம், 6-7 (1-7), 7-5, 7-6 (8-6), 6-7 (5-7), 2-6 என்ற செட் கணக்கில் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த போட்டியில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை, உலகின் ஐந்தாம்நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தனது காலிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் நாடியா பொடொறொஸ்காவிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026