2025 மே 01, வியாழக்கிழமை

புதிய ஒப்பந்தத்தை வேண்டும் வின்ஷியஸ் ஜூனியர்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 04 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டில், கனவில் வாழ்வதாகத் தெரிவித்த அக்கழகத்தின் முன்களவீரரான வினிஷியஸ் ஜூனியர், மட்ரிட்டுடன் புதிய ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட விரும்புவதாகக் கூறியுள்ளார்.

மட்ரிட்டுடனான 24 வயதான வினிஷியஸின் தற்போதைய ஒப்பந்தமானது இன்னும் இரண்டு ஆண்டுகள் காணப்படுகின்ற நிலையில், சவுதி அரேபியக் கழகங்கள் அவரைக் கைச்சாத்திட முயலுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரேஸிலியக் கழகமான பிளமெங்கோவிலிருந்து 2018ஆம் ஆண்டு மட்ரிட்டில் வினிஷியஸ் இணைந்து, மூன்று தடவைகள் லா லிகா பட்டத்தையும், இரண்டு தடவைகள் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கையும் வென்றிருந்தார்.

மட்ரிட்டுக்காக 300 போட்டிகளில் 102 கோல்களை வினிஷியஸ் பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .